+91 93603 01234

You have no items in your shopping cart.

Subtotal: Rs 0.00
Subscribe to RSS Feed

விவசாயம்

விவசாயம்

Grid  List 

Page:
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  1. ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

    ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

    Rs 110.00
    சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகரங்களிலிருந்து வந்து நல்ல விலை கொடுத்து ஆடுகளை வாங்கிக்கொண்டு போனார்கள். ஐந்தே ஆண்டுகளில் அவர் செய்த முதலீடு பல மடங்கு பெருகியது. இந்தத் தொழிலில் இப்படி ஒரு லாபமா என்று வியந்தவர், சென்னையில் பார்த்த வேலையைக் கைகழுவிவிட்டு, நிரந்தரமாக பாண்டிக்கே சென்றுவிட்டார். இன்று அவரிடம் பல ஆயிரம் ஆடுகள் இருக்கின்றன. இந்த வெற்றிக் கதை ஒரு புதிய வாசலை நமக்கு திறந்துவைக்கிறது. திறம்பட செய்தால் யார் வேண்டுமானாலும் லட்சம் லட்சமாக லாபம் சம்பாதிக்கலாம் என்னும் கனவை இந்தச் சம்பவம் நமக்குள் விதைக்கிறது.

    ஆடு வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாதே என்னும் கவலை வேண்டாம்.எத்தனை வகையான ஆடுகள் உள்ளன, கறிக்கு எந்த ஆட்டை வளர்க்கலாம், மிகுதியாகப் பால் கொடுக்கும் ஆடு எது, ஆடுகளுக்கு என்ன சாப்பிடக் கொடுக்கவேண்டும், எந்த ஆட்டுக்கு என்ன நோய் வரும், அதற்கு என்ன மருந்து உள்ளிட்ட அனைத்து அடிப் படைத் தகவல்களையும் கொண்டுள்ளது இந்நூல். தவிரவும், ஒரு புதிய, வெற்றிகரமான தொழில் வாய்ப்பை உங்களுக்கு இந்நூல் உருவாக்கிக்கொடுக்கிறது.

    Learn More

  2. ஆடு-மாடு வளர்ப்பு

    ஆடு-மாடு வளர்ப்பு

    Rs 90.00
    ஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. இன்று பல குழந்தைகள், ஏன் பெரியவர்கள்கூட பசுவின் பால் குடித்துதான் வளர்கிறார்கள்; வாழ்கிறார்கள். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் புகுந்துவிட்டாலும், விவசாயத் தொழில்களுக்கு ஆடு மாடுகள் ஏராளமாக உதவி புரிகின்றன. மாடுகள் தங்கள் உழைப்பைத் தருவதோடு இறைச்சி, பால், சாணம், கோமியம், கொம்பு, தோல் என அனைத்தையும் தந்து உதவுகின்றன. ஆடு வளர்ப்பிலும் அதேபோலதான். ஆட்டின் இறைச்சி, தோல், பால், புழுக்கை என அனைத்தும் பணமாகிறது. கறவை மாடுகள், உழவு மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் போன்ற மாட்டு இனங்களை வளர்க்கவும், அவற்றுக்குத் தேவையான புல் வகைகள், தீவனங்கள், பராமரிப்பு... என விளக்கங்களைத் தருவதோடு, மாடுகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள், வங்கிக்கடன், லாபகணக்குகள் என அத்தனை விவரங்களையும் தருகிறது இந்த நூல். ஆடு&மாடு வளர்ப்பு என்பது ஒரு லாபம் தரும் தொழிலாகவே மாறிவிட்டது. Learn More

  3. இந்தப் பூக்கள் விற்பனைக்கு

    இந்தப் பூக்கள் விற்பனைக்கு

    Rs 55.00
    மலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...? சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை! உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள். கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவிலும் மிகமிகப் பெரியது! இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள். Learn More

  4. இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி

    இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி

    Rs 60.00
    தமிழாக்கம்-ஆர். நல்லக்கண்ணு Learn More

  5. இயற்கை வழியில் வேளாண்மை

    இயற்கை வழியில் வேளாண்மை

    Rs 500.00
    இந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.

    ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக அளவில் புகழ் பெற்றது உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின் பயிர்வளர்ப்பு முறையை ஒட்டி அமைந்த ஒரு முறையை இவர் வலியுறுத்தினார்.

    இவரது வேளாண்மை முறையை ‘ இயல்முறை வேளாண்மை ‘ என்றும் ‘ எதுவும் செய்யாத வேளாண்மை ‘ என்றும் அழைக்கின்றனர்.

    ஃபுகோகாவின் வேளாண்மை முறை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கடைபிடிக்கப்படும் இயற்கை வேளாண் முறைகளுக்கு இணையானது.ஃபுகோகா தனது வேளாண்மை முறையை மேற்கத்திய வேளாண்முறைகளிலிருந்து மேம்படுத்தி மண்வளம் குன்றாமல், தேவைக்கு மிகுதியான உடலுழைப்பு இல்லாமல் நல்ல விளைச்சலைத் தரக்கூடியது என்று நிறுவ முயன்றனர்.

    ஃபுகோகா தான் பயிலும் உழவு முறையை ‘ இயற்கை உழவு முறை ‘ என்று அழைக்கலானார். அவரது செயல்பாடுகள் பெரும்பாலும் ஜப்பான் நாட்டிற்கு பொருந்துவதாக இருப்பினும், அச்செயல்பாடுகளின் உள்ளார்ந்த கொள்கைகள் உலக நாடுகள் பலவற்றில் வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

    ஃபுகோகாவின் முறைகளில் இயற்கைச்சூழல் கூடுமான வரை பேணப்படுகின்றது. சரியான சூழல் அமைத்துக்கொடுக்கப்படும்போது விதைகள் உழவு செய்யாமல் முளைக்க வைக்கப்படுகின்றன. செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல், உழவு இயந்திரத்தின் தேவை இல்லாமல் விளங்கும் ஃபுகோகாவின் முறைகளும், கொள்கைகளும் சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயிகளுக்கும் கூட கை கொடிக்கவல்லது. Learn More

  6. காய்கறி சாகுபடி

    காய்கறி சாகுபடி

    Rs 75.00
    பொய்யூர் முருங்கைக்காய்... வேலூர் முள்ளு கத்தரிக்காய்... பூங்காவூர் புடலங்காய்... அன்னஞ்சி தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று ஹெல்த் கேர் முக்கியத்துவத்தை அனைவருமே உணரத் துவங்கிவிட்டதால், நாள்தோறும் சத்தான காய்கறிகளை வாங்கி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால், விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மீது கூடுதல் கவனம் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காய்கறிச் செடியையும் விவசாயி வளர்த்தெடுப்பதற்குள் அவர்களை வாட்டி எடுக்கும் இடைஞ்சல்கள்தான் எத்தனை! திடீர் மழை, மின் தடை, உரத்தட்டுப்பாடு, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி, கூலி ஆள் பற்றாக்குறை... இப்படி எத்தனையோ! இவ்வளவு பிரச்னைகளையும் சமாளித்து வெற்றிகரமாக காய்கறி சாகுபடியில் சாதிப்பது எப்படி என்பது பல விவசாயிகளுக்கும் கைவந்த கலையாகவே இருக்கிறது. அத்தகைய விவசாயிகளின் வெற்றி ரகசியங்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் Learn More

  7. கோழி வளர்ப்பு

    கோழி வளர்ப்பு

    Rs 85.00
    நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை... என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு. கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்... என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன. Learn More

Grid  List 

Page:
  1. 1
  2. 2
  3. 3
  4. 4